தலைவாழை: நவராத்திரி நல்விருந்து - சாக்கோ சிப்ஸ் பாயாசம்

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா

சாக்கோ சிப்ஸ் பாயாசம்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1 கப்
சாக்கோ சிப்ஸ் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
உலர்ந்த திராட்சை, டூட்டி ஃபுரூட்டி, பூசணி விதை – தலா 1 டீஸ்பூன்
நெய் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

அடி கனமான வாணலியில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியைப் போட்டு அடுப்பைச் சீரான தணலில் வைத்து வேகவிடுங்கள். ஜவ்வரிசி வெந்ததும் சர்க்கரையையும் ஏலக்காயையும் சேருங்கள். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். உலர் திராட்சையையும் பூசணி விதையையும் நெய்யில் பொரித்துப் பாலில் சேருங்கள். இறுதியாக சாக்கோ சிப்ஸ், டூட்டி ஃபுரூட்டியை மேலே தூவிப் பரிமாறுங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE