தேனடை

என்னென்ன தேவை?

அரிசி மாவு அரை கப்

உளுந்து மாவு 2 டீஸ்பூன்

வெல்லம் 1 கப்

பசு நெய் 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

6. ஏலக்காய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு நெய், உப்பு சேர்த்துப் பிசையவும். இதைத் தேன்குழல் அச்சில் இட்டுப் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். அதிக நேரம் வேகவைக்க வேண்டாம். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெந்த தேன்குழலைக் கொதிக்கும் வெல்லப்பாகில் போட்டு மூன்று கொதி விட்டு எடுக்கவும். அபாரச் சுவையுடன் இருக்கும் இதை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.



ராஜபுஷ்பம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE