சிறுகீரை புலவ்

சிறுகீரை புலவ்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 2 கப்

ஆய்ந்து, நறுக்கிய கீரை - 1 கப்

தக்காளி, வெங்காயம் - தலா 1

மிளகாய்த் தூள், கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

தேங்காய்த் துருவல் - கால் கப்

முந்திரி - 4

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு



எப்படிச் செய்வது?

அரிசியை வெறும் வாணலியில்லேசாக வறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரி, மிளகாய்த் தூள் இவற்றை சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைக்கவும். குக்கரில் 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கி அரைத்து வைத்திருக்கும் விழுது, கரம் மசாலா, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். நான்கு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வறுத்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து மூடிவைக்கவும். 1 விசில் வந்ததும் சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கிவைக்கவும். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்.





ராஜகுமாரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE