என்னென்ன தேவை?
வெண்ணெய், சர்க்கரை,
மைதா - தலா கால் கிலோ
முட்டை - 5
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சர்க்கரையை நன்றாகப் பொடிக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து மிருதுவான கலவையாக அடிக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக அடிக்கவும். அதை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்துச் சலிக்கவும். சலித்த மாவை வெண்ணெய் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். நன்றாகக் கலந்ததும் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். கேக் டிரேயில் வெண்ணெய் பரப்பி அதன் மீது இந்தக் கலவையை ஊற்றவும். 160 டிகிரி வெப்பநிலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மைக்ரோ வேவ் அவனில் வைத்து பேக் செய்யவும். கேக் வெந்துவிட்டதா என்று சிறிய மரக் குச்சியால் குத்திப் பார்த்து எடுக்கவும்.
பைப்பிங் ஐசிங்
என்னென்ன தேவை?
வெண்ணெய் - கால் கிலோ
ஐசிங் சர்க்கரை - அரை கிலோ
பச்சை, பிரவுன் கலர் - சிறிதளவு
பல வண்ண மிட்டாய்கள் - அலங்கரிக்க
எப்படிச் செய்வது?
வெண்ணெயுடன் ஐசிங் சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதை இரண்டு பங்காகப் பிரித்து ஒன்றுடன் பச்சை நிறத்தையும் மற்றொரு பங்குடன் பிரவுன் நிறத்தையும் சேர்க்கவும். கேக்கை கிறிஸ்துமஸ் மர வடிவில் வெட்டவும். ஐசிங் பைப் கோனில் பச்சை நிறக் கலவையை நிரப்பி, மரத்தின் மேல் பகுதியில் பிழியவும். கீழ்ப்பகுதியை பிரவுன் நிற ஐசிங்கால் நிரப்பவும். மரத்தில் ஆங்காங்கே பல வண்ண மிட்டாய்களை வைத்து அலங்கரிக்கவும்.
லதாமணி ராஜ்குமார்
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago