என்னென்ன தேவை?
நெல்லிக்காய் 5
துவரம் பருப்பு அரை கப்
சின்ன வெங்காயம் 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 1
சீரகம் அரை டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்க
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பைச் சிறிது நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்புடன் மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்து உதிர்த்த நெல்லிக்காய், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். இறக்கும் போது பெருங்காயம், மல்லித்தழை சேர்க்கவும். சர்க்கரை வியாதிக்கு நல்லது. கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமும் குறையும். மாதவிடாய், கருப்பை தொடர்பான சிக்கல்களுக்கும் ஏற்றது.
ராஜபுஷ்பா
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago