வீட்டிலேயே செய்யலாம் கிறிஸ்துமஸ் கேக்: கப் கேக்

By ப்ரதிமா

பல வண்ணங்களில் ஒளிரும் நட்சத்திரமும், மணிகள் தொங்கும் கிறிஸ்துமஸ் மரமும், பரிசுப் பைகளுடன் மகிழ்ச்சியையும் சேர்த்தே அள்ளிவரும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அதிகரிக்கும். பலவித சுவைகளில் நாவுக்கு இனிமைகூட்டும் கேக் வகைகளோ கொண்டாட்டத்துக்குச் சுவைகூட்டும். இந்த வருட கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பானதாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய கேக் வகைகளுடன் வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லதாமணி ராஜ்குமார். கைவினைக் கலைகள் மட்டுமல்ல சமையல் கலையும் இவருக்கு அத்துப்படி. பலவித வடிவங்களிலும் சுவைகளிலும் அணிவகுக்கும் இந்த கேக் வகைகளே அதற்கு உதாரணம்.



என்னென்ன தேவை?

முட்டை - 5

சர்க்கரை - கால் கிலோ

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

மைதா - 200 கிராம்

பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்

முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி,

கோகோ பவுடர், செர்ரி - சிறிதளவு

பேப்பர் கப் மோல்டு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும். மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து சலிக்கவும். சலித்த மாவை முட்டைக் கலவையுடன் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்துவைக்கவும். ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும். இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும்.

மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலக்கவும். பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலவையை ஊற்றவும். 160 டிகிரி வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து, எடுக்கவும். விரும்பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம்.

லதாமணி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்