நலம் தரும் ரசம் - ஓமவல்லி ரசம்

By ப்ரதிமா

எண்ணெயில் பொரிக்காத, சத்துக்கள் கெடாத சமையலுக்குத்தான் எப்போதும் முதலிடம் தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. அப்படிச் சமைக்கிற உணவு வகைகள் எல்லாமே சுவையாகவும் இருப்பதுதான் இவரது சிறப்பு. எதில் எல்லாம் சத்துகள் நிறைந்திருக்கிறது என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்களோ அவற்றைப் பார்த்ததுமே நம்மில் பலர் முகம் சுளிப்பார்கள். ஆனால் அந்தப் பொருட்களிலும் சுவையான உணவு வகைகளைச் சமைக்கலாம் என்று சொல்லும் ராஜபுஷ்பா, உதாரணத்துக்குச் சிலவற்றைக் கற்றுத் தருகிறார்.

ஓமவல்லி ரசம்

என்னென்ன தேவை?

ஓமவல்லி இலை ஒரு கைப்பிடி

புளி எலுமிச்சை அளவு

பூண்டுப் பல் 3

தக்காளி 2

பச்சை மிளகாய் 2

காய்ந்த மிளகாய் - 1

மஞ்சள் தூள் சிறிதளவு

கடுகு, உளுந்து 1 டீஸ்பூன்

பெருங்காயம் சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு

நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்

பொடிக்க தனியா, மிளகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

புளியைக் கரைத்து வடித்துக் கொள்ளவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி இலை, பச்சை மிளகாய், பூண்டு மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பொடித்த பொடி, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி , உப்பு , கறிவேப்பிலை ,மல்லித் தழை, அரைத்து வைத்துள்ள ஓமவல்லி கலவை இவை அனைத்தையும் புளிக்கரைசலில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளிக் கலவையைச் சேர்த்து, ரசம் நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். ரசத்தை இறக்கியதும் சிறிது நேரம் மூடி வைக்கவும் இந்த ரசம் சளி, இருமல், தொண்டைப்புண்ணுக்கு நல்லது.

ராஜபுஷ்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்