உடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்.
கீரையைக் குழம்பாகவும் பொறியலாகவும் செய்வதைக் குறைத்துக்கொண்டு ஊத்தப்பம், மசியல், உசிலி, போண்டா என விதவிதமாகச் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் தினமும் கீரை வாங்கச் சொல்லி அடம்பிடிப்பார்கள் என்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. அவற்றில் சிலவற்றைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
சிறுகீரை ஊத்தப்பம்
என்னென்ன தேவை?
சிறுகீரை
(பொடியாக நறுக்கியது) – 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
தோசை மாவு – 4 கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிது
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
கீரையைச் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். வதக்கிய கீரையைச் சேர்த்து புரட்டியெடுத்துக்கொள்ளுங்கள்.
இதைத் தோசை மாவில் சேர்த்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். குழிவான வாணலி அல்லது தோசைக்கல்லில் மாவைச் சற்றுக் கனமாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago