தலைவாழை: மோரிலும் செய்யலாம் கேக்!

By ப்ரதிமா

வயிற்றுக்கு இதமானது தயிர். காய்ச்சல் என்றாலோ வயிறு சரிஇல்லை என்றாலோ புளிப்பில்லாத தயிரைச் சாப்பிடச் சொல்வார்கள். தயிரில் விதவிதமாகச் சமைத்துச் சுவைக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தயிரில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர். வெறும் தயிரையே விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளுக்கு இப்படிச் சமைத்துக் கொடுத்தால் உச்சி குளிர்ந்துபோவார்கள்.

தயிர் வடை

06CHLRD_VADAI தயிர் வடை என்னென்ன தேவை?

முழு உளுந்து - ஒரு கப்

கெட்டித் தயிர் - 2 கப்

பொடியாக அரிந்த மல்லித் தழை

- 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

துருவிய கேரட் - கால் கப்

வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைத்துக்கொள்ள

தேங்காய்த் துருவல் - கால் கப்

முந்திரிப் பருப்பு - 10

உப்பு - சிறிது

பச்சை மிளகாய் - 8

எப்படிச் செய்வது?

உளுந்தை நன்றாகக் கழுவி, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊறவைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீரை வடித்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்றாக அரையுங்கள். மாவு நன்றாகப் பூத்துவரும்போது, சிறிதளவு உப்பு சேர்த்து எடுத்துவிடுங்கள். அரைத்த மாவை வடையாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிரைக் கடைந்து அரைத்த விழுது, மல்லித் தழை, தாளித்த கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். பொரித்ததுமே வடையை இளம் சூடான எண்ணெயில் முக்கியெடுத்துத் தயிர் வைத்துள்ள பாத்திரத்தில் போட்டுக் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஊறவையுங்கள். வடைமீது சிறிதளவு தயிர் போட்டு, அதன் மேல் சீரகத் தூள், துருவிய கேரட் தூவிப் பரிமாறுங்கள்.

தயிர் வடை செய்ததும் நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் தயிர் புளித்து, சுவை கெட்டுவிடும்.

 

பழப் பச்சடி

கெட்டித் தயிர் - ஒரு கப்

துருவிய முந்திரி, பாதாம் - ஒரு டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

டூட்டி ஃபுருட்டி - ஒரு டீஸ்பூன்

ஆப்பிள், மாம்பழம், மாதுளை, வாழைப்பழம்,

திராட்சை (ஏதாவது ஒரு பழம்) - கால் கப்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

பொடியாக அரிந்த மல்லித்தழை - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கெட்டித் தயிரைக் கடைந்து துருவிய தேங்காய், சர்க்கரை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேருங்கள். கடுகு, மிளகாய் தாளித்து இந்தக் கலவையில் கொட்டுங்கள். துருவிய முந்திரி, பாதாம், உலர் திராட்சை, டூட்டி ஃபுருட்டி ஆகியவற்றைத் தயிரில் சேர்த்துக் கலக்குங்கள். கடைசியாகப் பழத் துண்டுகளைச் சேர்த்து, அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறுங்கள்.

தஹிசாட் பூரி

மைதா மாவு - கால் கப்

ரவை - 2 டேபிள் ஸ்பூன்

கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சாட் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்

தயிர் - ஒரு கப்

ஓமப்பொடி - கால் கப்

நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

ஆம்சூர் பொடி - அரை டீஸ்பூன்

மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன்

வேகவைத்து மசித்த உருளை - அரை கப்

எப்படிச் செய்வது?

மைதா, ரவை, கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். தயிரை லேசாகக் கடைந்து அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், சாட் மசாலா சேர்த்துக் கலக்குங்கள். அதனுடன் மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தழை சிறிது சேர்த்துக் கலக்குங்கள். பொரித்த பூரிகளின் நடுவே சிறு ஓட்டை போட்டு, கலந்துவைத்துள்ள கலவையை உள்ளே வைத்து, மேலே தயிர் ஊற்றி ஆம்சூர் பொடி தூவிப் பரிமாறுங்கள்.

மோர் தோசை

இட்லி அரிசி - 2 கப்

சின்ன வெங்காயம் - அரை கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

நெய் - சிறிது

சீரகம் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

கெட்டித் தயிர் - 2 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடைந்த தயிரில் அரிசி, வெந்தயம் இரண்டையும் ஆறு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரையுங்கள். மாவைப் புளிக்கவிடுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பெருங்காயத் தூள், இஞ்சித் துருவல், மல்லித் தழை சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டுங்கள். தோசைக் கல்லில் நெய் விட்டுச் சூடானதும் இந்த மாவைத் தோசையாக ஊற்றுங்கள். சிறிது நேரம் கழித்துத் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.

மோர்க்குழம்பு

மோர் - 2 கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

அரைத்துக்கொள்ள

தனியா - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - அரைத் துண்டு

காய்ந்த மிளகாய் - 2

மிளகு, சீரகம் - அரை டீஸ்பூன்

துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்

உருண்டை செய்ய

முழு உளுந்து - அரை கப்

மிளகு - ஒரு டீஸ்பூன்

உப்பு - சிறிது

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். அரைத்த மசாலாவை மோரில் கலந்து வாணலியில் ஊற்றுங்கள். மஞ்சள் தூள் சேர்த்து, தணலைக் குறையுங்கள். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

மோர்க்குழம்பில் உருண்டை போடுவதாக இருந்தால் உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, மிளகு சேர்த்துச் சிறு உருண்டையாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து மோர்க்குழம்பில் போடுங்கள்.

உருண்டை வேண்டாம் என்றால் வெண்டைக்காயை வதக்கிச் சேர்க்கலாம் அதேபோல் பூசணி, சௌசௌ ஆகியவற்றையும் வேகவைத்துச் சேர்க்கலாம்.

மோர்கார கேக்

சேமியா - கால் கப்

கோதுமை ரவை - கால் கப்

அரிசிமாவு - அரை கப்

தயிர் - 2 கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் - அரை கப்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 6 (விழுதாக அரைத்தது)

தேங்காய்த் துருவல் - கால் கப்

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது நெய்விட்டு சேமியா, கோதுமை ரவையைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். தயிரில் தேவையான அளவு நீர்விட்டு மோராகக் கடைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு கறிவேப்பிலை, சீரகம் போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கிளறி கடைந்த மோரை ஊற்றி அடுப்பைக் குறைந்த தீயில் வையுங்கள்.

வறுத்து வைத்துள்ள சேமியா, கோதுமை ரவையைக் கொட்டிக் கிளறி, பாதி வெந்ததும் அரிசிமாவைக் கொட்டிக் கிளறுங்கள். அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து மல்லித் தழையைத் தூவி நடுவே சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி இறக்கிவையுங்கள். எண்ணெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைக் கொட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

குறிப்புகள் - sudhajpgசுதா செல்வகுமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்