மாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: பிடிகருணைக் கிழங்கு வடை

காலையில் பள்ளிகளுக்கு உற்சாகமாகச் செல்லும் குழந்தைகள் மாலையில் சோர்வுடன் வீடு திரும்புவார்கள். அலுவலகம் செல்கிறவர்களுக்கும் இதே நிலைதான். நாள் முழுக்க வேலைசெய்து களைத்துப்போய் வருவார்கள். “சோர்வாக உள்ள குழந்தைகளுக்குப் புத்துணர்வு தரும் வகையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையான மாலைநேரச் சிற்றுண்டியை தயார் செய்ய முடியும்” என்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. அவற்றில் சிலவற்றைச் செய்ய நமக்குக் கற்றுத்தருகிறார்.

பிடிகருணைக் கிழங்கு வடை

என்னென்ன தேவை ?

பிடிகருணைக் கிழங்கு - 6

காய்ந்த மிளகாய் - 4



வெங்காயம் - 2

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய், உப்பு - தேவையான அளவு



எப்படிச் செய்வது ?

பிடிகருணையை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஊறவைத்து மிளகாயுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மசித்து வைத்திருக்கும் கருணை ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள். கருணைக்கிழங்கு வாங்கும்போது பழைய கிழங்காகப் பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் காரல், நமைச்சல் இருக்காது.

- வரலட்சுமி முத்துசாமி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE