வரகரிசி அடை

என்னென்ன தேவை?

வரகரிசி ஒரு கப்

குடைமிளகாய் 2

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா அரை கப்

பாசிப் பருப்பு கால் கப்

உளுந்து ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் ஒரு கப், கறிவேப்பிலை, சேர்த்து கொரகொரப்பாக அரையுங்கள். தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலக்குங்கள். மீதமுள்ள குடைமிளகாயைச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்குங்கள்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்துக் காய்ந்ததும் சிறிது மாவை ஊற்றி, சின்ன அடையாக வார்த்து வதக்கிய குடைமிளகாயை அதன் மேல் சிறிது தூவுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் மெதுவாகத் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள். அடையைச் சாப்பிடும்போது குடைமிளகாயின் சுவை தனித்துத் தெரியும். தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளித் தொக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE