பல்சுவை புடலை: தில் குஷ்

என்னென்ன தேவை?

புடலங்காய் - 2

பாசிப்பருப்பு - 1 கப்

வெல்லத் தூள் - 2 கப்

ஏலக்காய்ப் பொடி

- 1 டீஸ்பூன்

நெய், தேங்காய்த் துருவல் – தலா 1 கப்

முந்திரி - 10

எப்படிச் செய்வது?

புடலங்காயை விதைகளை நீக்கிவிட்டுத் துருவிக்கொள்ளுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து பாசிப்பருப்பையும் துருவிய புடலங்காயையும் வேகவையுங்கள். அதில் வெல்லத் தூள், ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்து கைவிடாமல் நன்றாகக் கிளறுங்கள். புடலங்காய் நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாத பதத்தில் வரும் போது, ஒரு தட்டில் கொட்டிப் பரப்புங்கள். முந்திரியைத் துருவி இதன் மீது தூவி அலங்கரித்தால் சுவையான தில் குஷ் தயார்.




வரலட்சுமி முத்துசாமி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE