புத்தாண்டு புது விருந்து: நட்ஸ் ஆப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி, புழுங்கலரிசி – தலா 2 கப்

உளுந்து, சாதம் – தலா 2 கைப்பிடி

வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன்

நெய் – தேவையான அளவு

பாலாடைக்கட்டி – சிறு துண்டு

தேங்காய்த் துருவல் – அரை மூடி

பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிதளவு

நாட்டுச் சர்க்கரை – 100 கிராம்



எப்படிச் செய்வது?

வெந்தயத்தை முளை கட்டச் செய்து, காயவைத்து, பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, துருவிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலை நிறம் மாறாமல் வதக்கிக்கொள்ளுங்கள். பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் வெந்தயப் பொடி, சாதம் சேர்த்து ஆப்ப மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான உப்பு போட்டுக் கரைத்து எட்டு மணிநேரம் புளிக்கவையுங்கள்.

இரும்பு தோசைக் கல்லில் இந்த மாவைச் சற்று கனமாக ஊற்றி சுற்றிலும் நெய் விட்டு மூடிவைத்து வேகவிடுங்கள். பிறகு அதை விரும்பிய வடிவங்களில் நறுக்கி மேலே தேங்காய்த் துருவல், சீஸ் துருவல், பாதாம், பிஸ்தா, முந்தரி துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது இவற்றை மாவுடன் கலந்து ஆப்பமாக ஊற்றியும் சாப்பிடலாம். தேங்காய்ப் பால் ஊற்றியும் சாப்பிடலாம்.


ராஜபுஷ்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்