பருப்பு வடை

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு ஒரு கப்

துவரம் பருப்பு அரை கப்

சோம்பு அரை டீஸ்பூன்

உளுந்து, மசூர் பருப்பு, பச்சை பயறு தலா 2 டீஸ்பூன்

இஞ்சி சிறிய துண்டு

பூண்டு 10 பல்

பெருங்காயம் ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

எண்ணெய், உப்பு சிறிதளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகள் அனைத்தையும் ஊறவைத்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரையுங்கள். மாவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசையுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு, பொடித்த சோம்பு, பெருங்காயம் சேர்த்து வடை மாவுப் பதத்துக்குப் பிசையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுங்கள். வடையைப் படையலுக்கு வைக்காதவர்கள், சுவைக்காக வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE