உப்பலடை

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 2 கப்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - கால் கப்

காய்ந்த மிளகாய் - 6

தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரையுங்கள். அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். இரண்டு பக்கமும் உப்பி, சாப்பிடச் சுவையாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE