கோதுமை பொங்கல்

என்னென்ன தேவை?

கோதுமை ரவை ஒரு கப்

பாசிப் பருப்பு அரை கப்

குடைமிளகாய் 2

மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்

நெய் 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி சிறு துண்டு

உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து கோதுமை ரவையுடன் சேர்த்து, போதுமான தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். வாணலியில் நெய் ஊற்றி மிளகு சேர்த்துத் தாளித்து, இஞ்சியைத் துருவிச் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த கோதுமை ரவை கலவையைச் சேர்த்து, சுருளக் கிளறுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, சீரகம் தூவிவ் கிளறுங்கள். கடைசியாக முந்திரிப் பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துச் சேருங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE