தோரண்

என்னென்ன தேவை?

பீன்ஸ் - 200 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

தேங்காய் - கால் மூடி

சீரகம் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

எப்படிச் செய்வது?

பீன்ஸ், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். 2 பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். மிக்சியில் தேங்காய், சீரகம், மீதமுள்ள ஒரு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். பீன்ஸுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும். நன்கு வெந்ததும் அரைத்த தேங்காயைச் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும். (பீன்ஸ் தவிர கேரட், கோஸ், அவரைக்காய், கோவைக்காய் என்று அவரவர் விருப்பப்படி சேர்த்துக் கொள்ள லாம்.)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE