திகட்டாத திருச்சி விருந்து: காரக் குழம்பு

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

பூண்டு - 6 பல்

புளி - சின்ன எலுமிச்சை அளவு

மிளகாய்ப் பொடி - அரை டீ ஸ்பூன்

மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, ஒரு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்குங்கள். புளிக் கரைசல், மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு டீஸ்பூன் வெல்லத் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் போது மல்லித்தழை தூவி இறக்கிவையுங்கள். விரும்பினால் சிறிது எண்ணெயில் மிளகைப் பொரித்துச் சேர்க்கலாம்.


அனுசியா பத்மநாதன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE