சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: உசிலி

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 100 கிராம்

முருங்கைப்பூ - 1 கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

கடுகு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பையும் முருங்கைப் பூவையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் வேகவைத்த முருங்கைப்பூ, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறினால் முருங்கைப்பூ உசிலி தயார். தயிர்சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பாசிப்பருப்புக்குப் பதிலாக இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றினால் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE