உருளை மசாலா

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு - 3

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள், கடுகு – தலா அரை டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு – தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேருங்கள். அனைத்தும் நன்றாக வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கைப் போடுங்கள். பின்னர் தீயைக் குறைத்துவையுங்கள். உருளைக் கிழங்குடன் வதக்கிய மசாலா நன்றாகச் சேரும்வரை கிளறிவிடுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவையுங்கள்.

தோசைக் கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றுங்கள். தோசை நன்றாக வெந்தவுடன் தோசையின் நடுவே உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடியுங்கள். விரும்பினால் தோசை மேல் சிறிதளவு வெண்ணெய் வைத்துப் பரிமாறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE