என்னென்ன தேவை?
கடலை மாவு, அரிசி மாவு, மைதா, ரவா, பொட்டுக்கடலை மாவு, ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை, கோதுமை மாவு - தலா 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு இதில் மாவுக் கலவையைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் வைத்து சற்று கனமாகத் தட்டுங்கள். அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சாஸ் அல்லது பஞ்சரத்ன ராய்தாவுடன் பரிமாறுங்கள். சங்கீதத்தின் ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு சாமான்களை வைத்துச் செய்யப்படும் சப்தஸ்வரா நிச்சயம் உங்களுக்குப் பலத்த கைத்தட்டல் பெற்றுத் தரும்.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago