எரிசேரி

By செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

நேந்திர வாழைக்காய் - 1

சேனைக் கிழங்கு - 100 கிராம்

வறுத்து அரைக்க:

தேங்காய் - அரை கப் (துருவியது)

காய்ந்த மிளகாய் - 3

மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்

தேங்காய் – கால் கப் (துருவியது)

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

நேந்திரம், சேனை இரண்டையும் தோல் நீக்கி சிறு சதுரத் துண்டுகளாக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரையுங்கள். வெந்த காய்களுடன் அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். துருவிய தேங்காயைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எரிசேரியில் கொட்டுங்கள். பரிமாறும்போது நன்றாகக் கலந்து பரிமாறுங்கள்.

தேங்காயை வதக்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சீக்கிரமே பொன்னிறமாக வதங்கிவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE