கமகம இசை விருந்து!- மோகன சூப்

என்னென்ன தேவை?

வேகவைத்து அரைத்த பச்சைப் பட்டாணி விழுது - 2 கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது)

- 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய்,

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு (விரும்பினால் )

– அரை டீஸ்பூன்

எலுமிச்சை - 2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

– 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சைப் பட்டாணியை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். பச்சைப்பட்டாணி கிடைக்காவிட்டால் உலர்ந்த பட்டாணியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். அதோடு 2 கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டுத் தாளியுங்கள். அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி பட்டாணி விழுதைச் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி உப்பு, மிளகுப் பொடி எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். மனம் மயக்கும் மோகன ராகம் போல இந்த சூப் அனைவருக்கும் பிடிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE