கலக்கலான காஷ்மீர் உணவு: தஹி வாலி லவுக்கி

தஹி வாலி லவுக்கி

என்னென்ன தேவை?

தோல் நீக்கி அரிந்த சுரைக்காய் – 1 கப்

தயிர் – 1 கப்

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள், கரம் மசாலா

   – தலா 1 டீஸ்பூன்

சில்லி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 2

தனியாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

மல்லித் தழை – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் சுரைக்காயைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் பட்டை, நசுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு இரண்டு கொதி வந்ததும் தயிர் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடுங்கள். பொரித்து வைத்துள்ள சுரைக்காயில் எண்ணெய் வடிந்ததும் அதைத் தயிர்க் கலவையுடன் சேர்த்து இரண்டு கொதிவிட்டு மல்லித்தழையைத் தூவி இறக்குங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE