கலக்கலான காஷ்மீர் உணவு: சுஃப்தா டெஸர்ட்

சுஃப்தா டெஸர்ட்

என்னென்ன தேவை?

சர்க்கரை – 1 கப் ‘

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

பனீர் துண்டுகள் – அரை கப்

நீளவாக்கில் அரிந்த

   தேங்காய்த் துண்டுகள் – கால் கப்

விதை நீக்கிய பேரீச்சை – அரை கப்

தோல் நீக்கிய பாதாம், பிஸ்தா – கால் கப்

உலர் திராட்சை – கால் கப்

முந்திரி – கால் கப்

ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

குங்குமப்பூ – 1 டீஸ்பன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் ஒரு கப் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை கரைந்து இரண்டு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.

வாணலியில் நெய் விட்டு பனீர் துண்டுகளை வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, தேங்காய், திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளுங்கள்.

அதில் சர்க்கரைப் பாகை ஊற்றி, வறுத்து வைத்துள்ள பனீர் துண்டுகளைச் சேர்த்து இரண்டு கொதிவிடுங்கள். அதில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்து இறக்கினால் குழந்தைகள் விரும்பும் சுஃப்தா டெஸர்ட் தயார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE