குழந்தைகளுக்கான மாலை விருந்து - பிரெட் பீட்சா

By ப்ரதிமா

கோடை விடுமுறை முடிந்து குழந்தைகள் மகிழ்ச்சியோடு பள்ளி செல்லத் தொடங்கியிருப்பார்கள். மழலையர் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளில் அடம் பிடித்து அழுத குழந்தைகள்கூட இந்நேரத்துக்குச் சமாதானம் ஆகியிருக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளின் உற்சாகத்தைக் கூட்டும்விதமாகத் தினமும் மாலை வேளைகளில் ஆரோக்கியமான நொறுவை வகைகளைச் செய்து கொடுக்கலாம் என்கிறார் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த மல்லிகா. அவற்றில் சிலவற்றைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.

பிரெட் பீட்சா

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் - ஒன்று

சீஸ் துருவல் - 1 கப்

புரோகோலி, காலிபிளவர், தக்காளி, கேரட், குடமிளகாய், மக்காச்சோளம் எல்லாம் சேர்த்து - ஒரு கப்

அன்னாசி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் சேர்த்து – ஒரு கப்

எப்படிச் செய்வது?

காய்கறிகளை அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளுங்கள். நான்ஸ்டிக் தவா மீது பிரெட் துண்டுகளை வைத்துச் சிறு தீயில் முறுவலாக ரஸ்க் பிஸ்கட்போல் வாட்டிக்கொள்ளுங்கள். பிரெட் மீது பீட்சா சாஸைத் தடவி அரை வேக்காடு வேகவைத்த காய்களைப் பரப்புங்கள். அதன் மீது வெங்காயத் தாளைப் பரப்பி துருவிய சீஸ், சில்லி ப்ளேக்ஸ் இரண்டையும் தூவுங்கள். சில நிமிடங்கள் அப்படியே மூடிவைத்து எடுத்துப் பரிமாறுங்கள். இந்த பிரெட் பீட்சாவை அதிக நேரம் தீயில் வைத்தால் தீய்ந்துவிடும். இதே போல் காய்களுக்குப் பதிலாகப் பழத்துண்டுகளை வைத்து சீஸ் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் மூடிவைத்தால் பழ பீட்சா தயார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்