குழந்தைகளுக்கான மாலை விருந்து - வெஜ் ரோல்ஸ்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்

ஜவ்வரிசி – இரண்டு டீஸ்பூன்

முட்டைகோஸ், காலிபிளவர், வெங்காயம், பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் ஊறவைத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றுடன் தேங்காய்த் துருவலையும் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

முட்டைகோஸ், காலிபிளவர், வெங்காயம், பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள். வதக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து சப்ஜியாக செய்துகொள்ளுங்கள். தவாவில் எண்ணெய் தடவி மாவைத் தோசைபோல் ஊற்றுங்கள். தோசை ஒருபுறம் வெந்ததும் அதன் நடுவே சப்ஜியைச் சிறிதளவு வைத்து முக்கோண வடிவில் மடித்து எண்ணெய் தடவி மூடி, சிறு தீயில் முறுவலாக வரும்வரை புரட்டியெடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE