தேர்வு நேர சத்துணவு! - கற்றாழை தயிர் சாதம்

By ப்ரதிமா

என்னென்ன தேவை?

சாதம் - 1 கப்

புளிக்காத தயிர் - 1 குழிக்கரண்டி

காய்ச்சிய பால் - 2 குழிக்கரண்டி

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

கற்றாழை - 1 துண்டு

மாதுளை, திராட்சை, உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை , மல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசிக்கொள்ளுங்கள். தயிருடன் கற்றாழையைச் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். சூடான சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அரைத்த கற்றாழை, பால், வெண்ணெய், உப்பு ஆகியவற்றைக் குழைத்த சாதத்துடன் சேர்த்து மசித்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் தாளித்துக் கொட்டிக் கிளறி, உப்பு சரி பார்த்து, பழங்களைச் சேர்த்துப் பரிமாறுங்கள். இது உடம்பு சூட்டைத் தணிக்கும்; எளிதில் செரிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE