வாழை சமையல்: சைவ மீன் குழம்பு

By ப்ரதிமா

இலை, பூ, காய், கனி, தண்டு, பட்டை என மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படக்கூடிய மரங்களில் வாழைக்கு முதலிடம். வாயுத் தொந்தரவு தரும் என்பதற்காகச் சிலர் வாழைக்காயைச் சமையலில் சேர்த்துக்கொள்வதில்லை. இன்னும் சிலரோ வறுவல், பஜ்ஜி போன்றவற்றுக்கு மட்டும்தான் வாழைக்காய் சரிப்பட்டுவரும் என்று நினைக்கக்கூடும். ஆனால், புட்டு தொடங்கி குழம்பு வரை வாழைக்காயில் பலவிதமாகச் சமைக்கலாம் என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ். அவற்றி்ல் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

சைவ மீன் குழம்பு

என்னென்ன தேவை?

வாழைக்காய் – 1

மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 8

பச்சை மிளகாய், தக்காளி – தலா 2

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பு வடகம் – அரை டேபி்ள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, புளி, நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள். வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காயையும் சோம்பையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். மண் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பு வடகத்தைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு மூன்று வகை பொடிகளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய் விழுதைச் சேருங்கள். சிறிது நேரம் கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள். விருப்பப்பட்டால் மாங்காயைச் சேர்க்கலாம். இறக்கும்போது சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

சமையலறை

4 years ago

மேலும்