மருத்துவ உணவு: அருமருந்துப் பொடி

By ப்ரதிமா

என்னென்ன தேவை?

காய்ந்த மிளகாய் – 3

மிளகு – ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்  

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

ஓமம், பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் – 10

பூண்டு – 10 பல்

தாளிப்பு வடகம் – அரை உருண்டை

ஆய்ந்து கழுவி நிழலில் உலத்திய கறிவேப்பிலை – அரை கப்

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மிளகாய், மிளகு, பெருங்காயம், கடலைப் பருப்பு, உளுந்து, சுண்டைக்காய் வற்றல், வடகம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு மிதமான தீயில் வறுத்துக்கொள்ளுங்கள். ஓமம், கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கடைசியாகப் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றியெடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE