என்னென்ன தேவை?
முதல் நிலை: உதிரியாக வடித்த சோறு – ஒன்றரை கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரிந்த பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
மெலிதாக அரிந்த கேரட்- 5 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் குடைமிளகாய் அரிந்தது – கால் கப்
இரண்டாம் நிலைக்குத் தேவையானவை:
மெலிதாக நீளவாக்கில் அரிந்த மூவர்ண குடைமிளகாய்கள் – 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பேபி கார்ன் - 1
ரெட் சில்லி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
பனீர் துண்டுகள் – கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மூன்றாம் நிலைக்குத் தேவையானவை:
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
அரிந்த பூண்டுப் பற்கள் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி கெச்சப் – 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயத் தாள் - 6 டேபிள் ஸ்பூன்
நான்காம் நிலைக்குத் தேவையானவை:
எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் தாள் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். அதில் உப்பு, சோறு இரண்டையும் சேர்த்து வதக்கி, வெங்காயத் தாளைத் தூவி இறக்குங்கள். முதல் நிலை தயார்.
வாணலியில் கால் கப் எண்ணெய் விட்டு, பனீரைப் போட்டுப் பொரித்துத் தனியே வையுங்கள். வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மூவர்ணக் குடைமிளகாய்கள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். வேக்காடாக வேகவைத்த பேபிகார்ன், ரெட் சில்லி சாஸ், உப்பு, பொரித்த பனீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி ஐந்து நிமிடம் மூடிவையுங்கள். காய்கள் நன்றாக வெந்த பிறகு இறக்கிவிடுங்கள். இரண்டாம் நிலை தயார்.
rajakumarijpgகுறிப்பு: ராஜகுமாரிவாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். கிரீன் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெச்சப் ஆகியவற்றைச் சேருங்கள். அரை கப் தண்ணீரில் சோள மாவைக் கரைத்துச் சேருங்கள். எல்லாமாகச் சேர்த்துக் கெட்டியானதும் வெங்காயத் தாளைத் தூவி இறக்குங்கள். மூன்றாம் நிலை தயார்.
வாணலியில் எட்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மெல்லிய நூடுல்லைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுங்கள். நூடுல்ஸ் பொரிந்ததும் எடுத்துவிடுங்கள். நான்காம் நிலை தயார்.
ஒரு வாழை இலையில் தேவையான அளவு முதல் நிலையில் தயாரித்த சோற்றைப் பரப்புங்கள். அதன் மேல் இரண்டாம் நிலையில் தயாரித்த காய்கறிகளை வையுங்கள். அதன் மேல் பொரித்த நூடுல்ஸ் சிறிதளவு வைத்து அதன் மேல் மூன்றாம் நிலையில் தயாரித்த சாஸைப் பரவலாக ஊற்றுங்கள். மேலே வெங்காயத் தாளைத் தூவி அலங்கரியுங்கள்.
செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago