தேவையானவை:
இறால் - அரை கிலோ (சுத்தம் செய்தபின் பாதி அளவாகக் குறைந்துவிடும்)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 1
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
* கடையிலேயே இறாலின் தோலை உரித்து வாங்கினாலும், இறாலுக்கு நடுவே மலக்குடம் இருக்கும். அதை நீக்க வேண்டும்.
* வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் விரைவில் வதங்குவதற்காக சிறிது உப்பு போடவும்.
* சிறிது நேரம் கழித்து நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியபிறகு, அதில் தக்காளியைப் போட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்குவதற்காக, இரண்டு நிமிடம் மூடிவைத்து, அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும்.
* இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கறிவேப்பிலை, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பின்னர், இறாலையும் அதில் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின்னர், அரை டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடிபோட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.
நிறைய மசாலா சேர்க்காமல், எளிமையாக செய்யக்கூடிய இறால் தொக்கு இது.
இதன் செய்முறை வீடியோ இதோ...
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago