பதின் பருவக் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு: பனீர் பட்டாணி ஊத்தப்பம்

என்னென்ன தேவை?

சாமை, இட்லி அரிசி – தலா 1 கப்

உளுந்து – அரை கப்

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்

பதமாக வேகவைத்த பட்டாணி – முக்கால் கப்

பனீர் – 200 கிராம்

கோஸ், கேரட் – தலா இரண்டு டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

இஞ்சி - சிறு துண்டு

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா 1 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

 

எப்படிச் செய்வது?

சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அவற்றுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, மாவைப் புளிக்கவையுங்கள். பனீர் தவிர்த்து மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்துக் கலந்து  ஊத்தப்பமாக ஊற்றுங்கள். அதன் மேல் பனீர் துருவலைத் தூவி, சுற்றிலும் எண்ணெய் விடுங்கள். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். ஊத்தப்பத்தின் மீது இட்லிப் பொடியைத் தூவி, நெய் விட்டுச் சாப்பிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE