எண்ணெய்க் கறி

By செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மட்டன் – 1 கிலோ

உப்பு – தேவையான அளவு

மிளகாய்ப் பொடி – சிறிதளவு

சீரகப் பொடி - 5 கிராம்

சோம்புப் பொடி – 5 கிராம்

மிளகுப் பொடி- 5 கிராம்

வரமிளகாய் – 10 முதல் 15

பட்டை – 4 துண்டுகள்

கிராம்பு, ஏலக்காய் – தலா 5

சீரகம், சோம்பு – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி

கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

கறியைக் கொழுப்பு நீக்கிச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அதனுடன் மேலே கூறிய பொடி வகைகளையும் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி ஒரு மெல்லிய துணியில் கட்டி சுமார் ஒரு மணி நேரம் தொங்கவிடுங்கள். கறியில் உள்ள நீர் நன்றாக வடிந்தவுடன் எடுத்துவிடுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, இரண்டாக வெட்டிய வரமிளகாய் ஆகியவற்றைப் போட்டுக் கிளறுங்கள். பிறகு அதில் கறியைப் போட்டு மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கறி நன்கு வெந்தவுடன் கறிவேப்பிலையைப் போட்டுக் கிளறி இறக்கிவிடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE