குளு குளு கோடை! - நன்னாரி சர்பத்

By ப்ரதிமா

என்னென்ன தேவை?

நன்னாரி வேர் - 25 கிராம்

பாதாம் பிசின் - 10 கிராம்

எலுமிச்சைப் பழம் -1

சர்க்கரை - 2 கப்

சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்

சோடியம் பென்சோயேட் - 1 சிட்டிகை

தேன் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நன்னாரி வேரை நன்றாக அலசி அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி 24 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு வடிகட்டி அந்த நீருடன் சர்க்கரையையும் சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்து சூடுபடுத்துங்கள். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி மெல்லிய துணியால் வடிகட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அதில் சோடியம் பென்சோயட் சேர்த்துக் கலக்கி, உலர்வான பாட்டிலில் ஊற்றிவையுங்கள்.

இதை அப்படியே பருகக் கூடாது. ஒரு பங்கு நன்னாரி சிரப்புக்கு மூன்று பங்கு தண்ணீர்விட்டு பாதாம் பிசின், சில துளி எலுமிச்சைச் சாறு, சிறிதளவு தேன் விட்டுப் பருகினால் சுவை அருமையாக இருக்கும். வீட்டில் செய்யும் இந்த நன்னாரி சர்பத் ஆறு மாதங்கள்வரை கெடாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE