தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணின் பாரம்பரிய உணவுகளில் கடப்பா, அசோகா அல்வா போன்றவற்றுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. அவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த என்.ஜெயந்தி.
உளுந்து கார கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
வெள்ளை உளுந்து - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி உப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக (உப்புமா மாவு பதத்துக்கு) மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
03CHLRDjayanthiகுறிப்பு: என்.ஜெயந்திஅரைத்த விழுதை இட்லிப்பானைத் தட்டில் வைத்து வேகவிட வேண்டும். வேகவைத்து ஆறிய பின்னர் அதை உதிர்த்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளியுங்கள். பிறகு கறிவேப்பிலை, உதிர்த்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு லேசாக வதக்கினால் பூரணம் தயார்.
அரிசி மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு பிசைந்துகொள்ளுங்கள். கையில் எண்ணெய்யைத் தொட்டுக்கொண்டு கொழுக்கட்டை சொப்பு செய்து, உள்ளே பூரணத்தை வைத்து மூடிவிடுங்கள். இவற்றை இட்லிப்பானையில் வைத்து வேகவைத்து எடுங்கள்.
வளரிளம் பருவப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தப் பலகாரம் உகந்தது.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago