தலைவாழை: மரவள்ளிக் கிழங்கு கார அடை - அவியல்

By எஸ்.கல்யாணசுந்தரம்

என்னென்ன தேவை?

அடை செய்யத் தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 2 கப்

மரவள்ளிக் கிழங்கு - அரை கிலோ

காய்ந்த மிளகாய் - 15

பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 3

எப்படிச் செய்வது?

அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மரவள்ளிக் கிழங்கைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அவற்றுடன் மிளகாய், உப்பு சேர்த்துச் சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அதில் வெங்காயத்தைச் சேர்த்து தோசைக்கல்லில் சற்றுக் கனமாக ஊற்றியெடுத்தால் சுவையான அடைகள் தயார்.

அவியலுக்குத் தேவையான பொருட்கள்

கேரட் - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

செளசெள - 50 கிராம்

முருக்கைக்காய் - 1

வாழைக்காய் - 1

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்

முந்திரி - 10

தயிர் - ஒரு கப்

எப்படிச் செய்வது?

அனைத்துக் காய்களையும் பாதி விரல் அளவுக்கு நீளவாக்கில் நறுக்கி உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அரைத்த தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவையுங்கள்.

கடைசியாகத் தேங்காய் எண்ணெய்யை 50 மி.லி. அளவுக்குச் சுட வைத்து அதில் ஊற்றி, ஆறிய பின்னர் ஒரு கப் தயிர் ஊற்றிக் கலக்கினால் சுவையான அவியல் தயார். மரவள்ளிக் கிழங்கு கார அடையுடன் அவியலைச் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான்

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE