காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார்.
ஆரஞ்சுப்பழத் தோல் தொக்கு
என்னென்ன தேவை?
ஆரஞ்சுப் பழத் தோல்
(பொடியாக நறுக்கியது) - 2 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப்
வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி
- அரை டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
மிளகாய் வற்றல் - 3
கடுகு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய், கடுகு தாளித்து ஆரஞ்சுப் பழத் தோல், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் வெந்தயப் பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்குங்கள். புளிக்கரைசல், உப்பு சேர்த்து அதனோடு மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கெட்டியாகி எண்ணெய் மேலே வந்ததும் வெல்லம், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கிவிடுங்கள். தொக்கு ஆறியதும் கண்ணாடிப் பாட்டிலில் மாற்றிக்கொண்டால் பல நாட்களுக்குக் கெடாது.
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago