பலம் தரும் பேரீச்சை: தோசை

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

பாசிப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

பேரீச்சம் பழம் - 10

நெய் - 2 டீஸ்பூன்

தூள் வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வறுத்து, கையால் நசுக்கும் பதத்தில் வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். பேரீச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வதக்கி வெல்லத்தைச் சேருங்கள். வெல்லம் இளகியதும் மசித்த பருப்பு, பேரீச்சை சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மாவைத் தோசைக் கல்லில் ஊற்றி இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு, குறைவான தீயில் வேக வையுங்கள். நடுவில் பேரீச்சம் பழக் கலவையை வைத்து, தோசையை மடித்துப் பரிமாறுங்கள். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்தத் தோசையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE