All That Breathes | இஸ்லாமிய இளைஞர்களும், கருப்பு பருந்துகளும்... - ஆஸ்கர் ரேஸில் கவனம் ஈர்த்த ஆவணப் படம் எப்படி?

By இந்து குணசேகர்

சுற்றுச்சூழல் மாசினால் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து இந்த ஆவணப் படம் தொடங்குகிறது.

முகமத் சவுத், நதீப் ஷெசாத் இருவரும் சகோதரர்கள், செவிலியர்கள். டெல்லியில் மாசடைந்த நச்சு காற்றில் உயரே பறக்க முடியாமல் கீழே விழும் கருப்புப் பருந்துகளை மீட்டு தங்கள் வீட்டிலுள்ள சிறிய மருத்துவ அறையில் அப்பருந்துகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இவர்களுக்கு சாலிக் ரஹ்மான் என்ற துருதுரு இளைஞரும் உதவி செய்கிறார். ஆவணப் படம் தொடங்கி சில நிமிடங்கள் கடந்த பிறகு இந்த மூவரும் மாசு கலந்த காற்றை சுவாசிக்க முடியாமல் விழும் இப்பருந்துகளை காப்பாற்றுவதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறார்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.

பருந்துகளை காப்பாற்றுகிறார்கள் என்றால் அது வெறும் காப்பாற்றுதல் மட்டும் மல்ல.. அந்த இளைஞர்களுக்கும் பறவைகளுக்கும் இடையே பிரச்சாரம் செய்யப்படாத உறவு ஒன்று மெல்ல மெல்ல வளர்கிறது. இங்கிருந்துதான் இந்த ஆவணப்படம் தனித்து தெரிகிறது. அதுவே ஆஸ்கர்வரை இப்படத்தை கொண்டு சென்றிருக்கிறது.

ஆவணப் படத்தின் ஒரு காட்சியில், ஆற்றில் அடிபட்டு விழுந்திருக்கும் பருந்தை காப்பாற்ற இந்த இளைஞர்கள் உதவி கோருவர்..ஆனால், உதவி உடனடியாக கிடைக்காது. ஒரு கட்டத்தில் பருந்தை காப்பாற்றிவிட அந்த ஆழமான ஆற்றில் அவர்களே இறங்கிவிடுவர்.

இவ்வாறு பருந்துகளை காப்பாற்ற இவர்கள் ஒருபுறம் ஓடிகொண்டிருக்க, மறுபுறம் காற்று மாசினால் பேரழிவுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் டெல்லியின் பக்கங்களை ஆவணப்படம் நம் முன் நிறுத்துகிறது. மக்களின் மதக் கொண்டாட்டம் ஒன்றில் தீயிலிருந்து வரும் கரும்புகையில் மெல்ல ஊர்ந்து செல்லும் நத்தை, வானில் பறக்கப்படும் நூற்றுக்கணக்கான மாஞ்சா நூல் காத்தாடிகள், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து வெளிவரும் ஆமை, மாசடைந்த நீரில் மூழ்கி இறக்கும் பூச்சிகள், நச்சுகாற்றில் முட்டி மோதி பறக்கும் பறவைகள் என மாசினால் ஒரு நகரம் எவ்வாறு தனது தன்னியல்பை இழக்கும் என்ற எச்சரிக்கையை டெல்லி நமக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறது.

இவ்வாறு நம்பிக்கையற்று நிலத்தில் தூதுவர்களாக பயணித்து கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய இளைஞர்கள் கடந்த 20 வருடங்களில் சுமார் 20,000க்கும் அதிகமான கருப்பு பருந்துகளையும், பிற பறவைகளையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆவணப்படத்தினல் உணர்வுப்பூர்வமான பல தருணங்களை கடந்து வந்த முகமத் சவுத், நதீப் ஷெசாத் இருவரும் “ சுவாசிக்கும் அனைத்து உயினங்களுக்கு” என்ற அவர்களின் கூற்றுபடி விலங்குகளுக்கான மருத்துவமனையை திறந்க்கிறார்கள்.

ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்.. “இந்த உலகம் அனைத்திற்குமானது...” என்ற அவசியமான செய்தியை இஸ்லாமிய சகோதரர்கள் மூலம் பதிவுச் செய்திருக்கிறது.

இந்த ஆவணப் படம் ஓரு பார்வையாளராக இரண்டு செய்திகளை எனக்கு கடத்தியது, அவசரமான உலகத்தில் இந்த கருப்பு பருந்துகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இந்த இளைஞர்கள் தங்களை மீட்டெடுத்து கொள்கிறார்களா? அல்லது இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலையும் அதற்கு பொது சமூகத்தில் நிலவும் அமைதியையும் வானில் அடிப்பட்டு விழும் பருந்துடன் இயக்குனர் தொடர்புப்படுத்துகிறாரா?...

ஆல் தட் ப்ரீத்ஸ் ('All That Breathes') ஆவணப் படத்தை ஷானக் சென் இயக்கி இருக்கிறார். அற்புதமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் பென் பெர்னார்ட்.

சிறந்த ஆவணப்படத்திற்கான கேன்ஸ் விருதுதுடன் ஆறு சர்வதேச விருதுகளை ஆல் தட் ப்ரீத்ஸ் வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியல்வரை இப்படம் சென்றது.

ஆல் தட் ப்ரீதஸ் ஆவணப் படம் டிஸ்னி ஹாட்ஸ்ஸ்டார் (இந்தியில் காணலாம்), ஹெச்பிஓ (ஆங்கிலம்) ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்