எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘அம்மிணிபிள்ளை வெட்டு கேஸ்’ (Amminipillai Vettu Case) என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள மலையாளத் திரைப்படம் ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ (Oru Thekkan Thallu case). இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீஜித்.என் இயக்கியுள்ளார். கேரளத்தின் அழகிய கடற்கரை கிராமம் ஒன்றில், இரு ஆண்களின் வாழ்வில் இருக்கும் பெருமையும் ஈகோவும் ஒன்றோடு ஒன்று மோதி ஆதிக்கம் செலுத்தும்போது நேரும் விபரீதங்களை நகைச்சுவைக் கலந்து பேசியிருக்கிறது இந்தப் படம்.
கடற்கரை கிராமத்தின் லைட் ஹவுஸ் பராமரிப்பாளர் அம்மிணி (பிஜூ மேனன்) அவருடைய மனைவி ருக்மணி (பத்மப்ரியா). இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் வஸந்தி (நிமிஷா சஜயன்), இவரின் காதலன் பொடியன் (ரோஷன் மேத்யூ). ஒருநாள் பொடியனும் வஸந்தியும் அலைநுரை போல் பொங்கும் காதலைக் கட்டுப்படுத்த தவறி, அம்மிணி வீட்டின் அருகில் இன்பத்தில் திளைத்திருக்க, அம்மிணி இதனைக் கண்டிக்கும்போது அவருக்கும் பொடியனுக்கும் கைகலப்பாகிறது . அவ்வளவுதான், இருவருக்கும் இடையிலான ஈகோ சண்டை இங்கிருந்துதான் தொடங்குகிறது. இது போதாது என்று வேலைவெட்டி எதுவுமின்றி ஊரைச் சுற்றும் பொடியன் மற்றும் அவரது 4 நண்பர்களில் சிலரும் அம்மிணியால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அம்மிணியை பழிவாங்க நினைக்கிறார்கள். இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ட்ரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும், தள்ளுமாலா திரைப்படங்களின் வரிசையில், இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினைகளை மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இந்த "ஒரு தெக்கன் தள்ளு கேஸ்" என்றாலும், இது வேறு மாதிரியாக இருக்கிறது. கதாப்பாத்திரங்களின் தேர்வும், காட்சிப்பதிவுகளும் சிறப்பாக இருப்பதே அதற்கு காரணம். ஒரு மெலோ டிராமாவான இந்த திரைப்படத்தின் காட்சிப்படிமங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறுகதை படிக்கும் உணர்வைத் தருகிறது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துக்கின்றன. குறிப்பாக பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.
பிஜூ மேனன் சொல்லவே வேண்டாம். சில இடங்களில் நம்மை மீறி அய்யப்பனும் கோஷியும் சாயல் தெரிந்தாலும், உண்மையில் இந்தப் படத்தில் வேறு மாதிரியாகத்தான் நடித்திருக்கிறார். பத்மப்ரியாவையும், நிமிஷா சஜயனையும் காணும்போதும் கண்களும் மனதும் நிறைகிறது. இருவருமே தங்களது பாத்திரங்களை வெகு இயல்பாக செய்திருக்கின்றனர்.
» ‘ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்: நடிகர் பிரபாஸ்
» உலகம் முழுக்க ரூ.300 கோடியுடன் வசூலில் முன்னேறும் பொன்னியின் செல்வன்
ரோஷன் மேத்யூ மற்றும் அவரது நண்பர்களாக வருபவர்கள், மயில் மார்க் உடல் வலி எண்ணெய் விற்பனை செய்பவர், வனக்காவலராக ஊருக்குள் அவ்வப்போது வரும் நபர் என நிறைய குட்டி குட்டியானப் பாத்திரப் படைப்புகள் சிறப்பு. கணவன், மனைவியாக பிஜூ மேனனும் பத்மப்ரியாவும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களுமே இனிமையாக இருக்கிறது.
இந்த ஜானரில் ஏற்கெனவே மேற்சொன்ன படங்களை பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் படம் ஓர் அயற்சியைத் தரலாம். அதேபோல், படம் நடைபெறும் காலக்கட்டத்தைக் கொண்டு நாயகிகள் உள்பட பலரும் கேரளத்தின் பாரம்பரிய முறையிலான முண்டு அணிந்தே வருகின்றனர். ரோஷன் மேத்யூ, நிமிஷா சஜயனுக்கு லிப்லாக் காட்சிகளும் இருப்பதால், சற்று கவனத்துடன் பார்ப்பது நல்லது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்போது காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
38 mins ago
ஓடிடி களம்
23 hours ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago