மே 12-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘யாத்திசை’ திரைப்படம் 

By செய்திப்பிரிவு

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவான ‘யாத்திசை’ திரைப்படம் மே 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘யாத்திசை’. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. பாண்டியர் - எயினர் குல வரலாற்றை புனைவு கலந்து சொல்லியிருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

தமிழ்நாட்டில் படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. ரூ.7-10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் காட்சிகளில் தேவையான பிரமாண்டத்தை வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் உருவாக்கியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் படத்தில் வழக்கொழிந்த பழங்கால தமிழ் மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்ற இப்படம் வரும் மே 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்