இனி ஜியோ சினிமா தளத்தில் ஹெச்பிஓ கன்டென்ட் - ரசிகர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

ஹெச்பிஓ உரிமையாளரான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்துக்கும், ஜியோ சினிமா உரிமையாளரான ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனமும் புதிய புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றன. அதன்படி இந்தியாவில் ஹெச்பிஓ படைப்புகளை இனி ஜியோ சினிமா தளத்தில் படிப்படியாக காணமுடியும்.

மார்ச் மாதத்தோடு ஹெச்பிஓ படைப்புகள் அனைத்தும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. ஏப்ரல் முதல் ஹெச்பிஓ வலைத்தொடர்கள் இல்லாத தளமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மாறியது.

இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுகளின் லைவ் ஒளிபரப்பு மற்றும் இதர பொழுதுபோக்குகள் எனப் பல இருந்தும், ஹெச்பிஓ தொடர்கள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது. அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு சில ஹெச்பிஓ வலைத்தொடர்கள் ஜியோ சினிமாவில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மேலும், ஹெச்பிஓ உரிமையாளரான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்துக்கும், ஜியோ சினிமா உரிமையாளரான ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனமும் புதிய புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றன.

அதன்படி, இந்தியாவின் ஹெச்பிஓ படைப்புகள் மட்டுமன்றி, வார்னர் பிரதர்ஸின் ஹாலிவுட் படைப்புகளையும் இனி ஜியோ சினிமாவில் காண முடியும். வார்னர் பிரதர்ஸின் ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், டாம் அண்ட் ஜெர்ரி வரிசை என ஹாலிவுட் படைப்புகள் அனைத்தையும் இனி ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE