‘பொன்னியின் செல்வன் 2’ முதல் ‘பத்து தல’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் நாளை (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் நாளை ஒரே படம் தான் வெளியாகிறது. மம்முட்டி நடித்துள்ள ‘ஏஜெண்ட்’ தெலுங்கு படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஃபஹத் பாசில், இன்னொசன்ட் நடித்துள்ள ‘பாச்சுவும் அல்புதவிளக்கும்’ (Paachuvum Albhuthavilakkum) மலையாள படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அறிமுக இயக்குநர் ஆரிஃப் கான் இயக்கத்தில் ஆல்யா நடித்துள்ள ‘யூ டர்ன்’ (U-Turn) படம் ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஓபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. நானியின் ‘தசரா’ படத்தையும் நெட்ஃப்ளிக்ஸில் தற்போது காண முடியும். நிவின் பாலியின் ‘துறமுகம்’ படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை (ஏப்ரல் 28) காண முடியும். குஞ்சாகா போபன், ரஜிஷா விஜயன் நடித்துள்ள ‘பகலும் பத்திரவும்’ (Pakalum Paathiravum) படத்தை ஜீ5 தளத்தில் நாளை பார்க்க முடியும்.

இணையதொடர்கள்: ரிச்சர்ட் மாட்டன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிடாடெல்’ (Citadel) ஆங்கில இணைய தொடர் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்