2022-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருது வென்ற படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பார்வையாளர்களுக்கு எந்தெந்த படங்களை எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்: 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை அள்ளிகுவித்து ‘மாஸ்’ காட்டியிருக்கிறது ‘‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once) திரைப்படம். இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது.
‘தி வேல்’ (The Whale): இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser) நடிப்பில் உருவான ஹாலிவுட் படம் ‘தி வேல்’ (TheWhale). அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒப்பனைக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. படத்தை சோனிலிவ் ஓடிடி தளத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் காணலாம்.
» ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடனமாடாதது ஏன்?
» அருள்நிதி - துஷாரா விஜயனின் 'கழுவேத்தி மூர்க்கன்' மோஷன் போஸ்டர்
ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்: சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படப்பிரிவில் விருது வென்றுள்ள ‘ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்’ (All Quiet on the Western Front) ஜெர்மன் படம். போரை மையக்கதையாக கொண்ட இப்படம் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
ஆர்ஆர்ஆர்: ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், என்டிஆர் நடிப்பில் வெளியான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்தது.
தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ்: சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் (Black Panther: Wakanda Forever): சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை இப்படம் பெற்றது. மார்வல்ஸின் ப்ளாக் பாந்தர் சீரிஸ்களில் ஒன்றான இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணப்படுகிறது.
டாப் கன்: மேவ்ரிக் (Top Gun Maverick): சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதை வென்ற இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. டாம் க்ரூஸ் நடித்துள்ள இப்படம் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகியுள்ளது.
பினோச்சியோ (pinocchio): சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பெற்றுள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
29 days ago