மம்மூட்டி, ரம்யா பாண்டியன் நடிப்பில் மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் நெட்ஃபிளக்ஸில் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து பலரும் தங்களது சமூக வலைதள பங்கங்களில் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, தீவிர சினிமா ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படம் குறித்த நெட்டிசன்களின் கருத்துகள் சில இங்கே...
ENIGMA: நண்பகல் நேரத்து மயக்கம் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஈரானிய, பிரெஞ்ச் மொழிப் படங்கள்தான் உலக மொழிப்படம் என்கிற நினைப்பை தவிடுபொடியாக்கி அசரவைத்த தரமான மலையாள படைப்பு. இந்தியாவின் பழமையான மொழிகளில் முதலாமவது மொழி தமிழ் மொழி என்கிற அடைமொழியோடு, திருக்குறளோடு ஆரம்பிக்கிறது இந்த மலையாளப் படம்.
பிண்ணனி இசையே கிடையாது. படம் முழுக்க பழைய தமிழ் பாடல்களும், எம்ஆர்.ராதா வசனங்களும் மட்டும். எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து பிண்ணனியில் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மம்மூட்டி குடித்துக்கொண்டே சிவாஜியின் வசனத்தில் நடித்துக் காட்டுவார். இந்தப் படத்தின் கதையை தன்னுடைய தரமான ஒளிப்பதிவோடு ஒன்றவைத்திருப்பார் தேனி ஈஸ்வர். முழுக்க முழுக்க தமிழில் ஒரு மலையாளப் படம்.க்ளைமாக்ஸில் வீடுவரை மனைவி, வீதி வரை உறவு பாடலோடு... ஆஸ்கருக்கு தகுதியான மாபெரும் கலைஞன் மம்மூட்டி. மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு திருப்தியான உலக சினிமா கொண்டாட வேண்டிய படம்.
Cibi Chakravarthy N: '̀நண்பகல் நேரத்து மயக்கம்' - கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வேனில் சுற்றுலா வரும் ஜேம்ஸ்... மீண்டும் கேரளாவுக்குச் செல்லும்போது வேனிலிருந்து இறங்கி, திடீரென முன்பின் தெரியாத ஒரு வீட்டுக்குள் சென்று சுந்தரம் என்ற கேரக்டராக வலம் வருகிறார். அந்த இரு குடும்பங்களும் இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் விழிக்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனால், பொறுமையாகப் படம் பார்த்துவிட்டால்... ஒரு அட்டகாசமான அனுபவம் கேரன்டி.
மம்முட்டி படத்தில் நடிக்கிறார் என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டீர்கள். மெகா ஸ்டார் அந்த இரு கேரக்டர்களுக்கும் அத்தனை நியாயம் செய்திருக்கிறார். படத்தில் தனியாகப் பாடல்களோ பின்னணி இசையோ இல்லை... பழைய தமிழ்ப் படங்களில் வரும் பாடல்களும், வசனங்களும்தான் பின்னணி இசையே. புதுவித அனுபவமாக இருக்கிறது. ஃபிரேம் பை ஃபிரேம் ரசனையுடன் செதுக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். படத்தில், பூ ராமு, ரம்யா பாண்டியன் என நமக்கு முகம் தெரிந்த தெரியாத அனைத்து கதாபாத்திரங்களுமே அட்டகாசம். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி சார்... எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? படம் பார்த்து முடித்து ஒருநாளிருக்கும். மண்டைக்குள் இன்னமும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது!
Arbin Zacharias: தமிழ்நாடு திரைப்பட ரசிகர்கள் மொத்தமாக கொண்டாடும் மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம், ஏனோ மலையாளக்கரை மக்களை ஈர்க்கவும் இல்லை விரல் நுனியால் கூட சீண்டவும் இல்லை. அந்த இயக்குனரை திட்டியே பல விமர்சங்களை பார்க்க முடிகிறது. காட்சிகளின் பின்னணியில் கோர்க்கப்பட்டிருக்கும் தமிழ் பாடல்களும் வசனங்களும் மலையாள மக்களுக்கு புரியாமல் போனதுதான் காரணமாக கூட இருக்கலாம். #LijoJosePellissery தரமான இன்னொரு படைப்புக்கு வாழ்த்துகளும் நன்றியும், அடுத்த முயற்சிக்காக காத்திருக்கிறோம்.
நீர்தோசைவித்சட்னி: 15 நிமிசத்துலயே கேரக்டர் அறிமுகம் பண்ணிருக்கலாம். இதை லிஜோவோட மத்த படங்களோட கம்ப்பேர் பண்ண வேண்டியதில்லை. ஒவ்வொரு படமும் ஒரு தனி அனுபவம். நண்பகல் நேரத்து மயக்கம் - ஓரளவுக்கு மயக்கும்
நாடோடி: படம் மெதுவாகத்தான் போகிறது. ஆனாலும் ரசிக்கும்படியே இருக்கின்றது. பழைய தமிழ்ப் பாடல்கள், படங்களின் வசனங்கள் பின்னணி இசையாக பலம் சேர்க்கின்றது. தேனி ஈஸ்வரின் கேமரா, மம்முட்டியின் நடிப்பு இரண்டுமே..
அதீதன் சுரேன்: "நண்பகல் நேரத்து மயக்கம்" திரைப்படத்தில் எந்தக் காட்சியும் மம்முட்டிக்கு வைக்கப்படவில்லை. காட்சிக்குள்தான் மம்மூட்டி வருகிறார். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் ஒரு சீனைத் தவிர இக்காவிற்கு வேறு க்ளோஸ் அப்களே இல்லை. இதுவே "கௌரவம்" திரைப்பட வசனம் ஓவர்லாப் வரும் காட்சியில் வேறு ஒரு நடிகராய் இருந்திருந்தால்... ஆனாலும் மம்முட்டி என்கிற மகாகலைஞன் வெளிப்படவே செய்கிறார்... முக்கியக் குறிப்பு: மம்மூட்டி ஒரு மெகா ஸ்டார். மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.....
Mani Mkmani: ஒரு புனைவு எவ்வளவு வியப்பை எழுப்ப முடியும் என்பதற்கு இப்படத்தைக் காட்டிலும் அப்பட்டமான வேறு ஒன்று இருக்காது. மிக எளிமையாக ஒரு திருப்பம், ஒரு நிலபரப்பு, கொஞ்சம் மனிதர்கள். கடுகளவு ஆடம்பரமின்றி படம், நேரடியாக நெஞ்சைத் தொடுகிறது. சொன்ன கதையில் இருந்து சொல்லாத கதைகள் எழுந்து கண்கள் நிரம்பின.
நண்பகல் நேரத்து மயக்கத்தை ஒளிப்பதிவாளர் தன்னுடைய வர்ணங்களால் நிரவும்போது, அது திரைக்கதையில் ததும்பி நின்றதை அறிய முடியும். மம்முட்டி இரண்டு வேறுபட்ட நிலங்களின் ஆளாகவும், பல நேரங்களில் ஒருவரே இருவராகவும் இருந்து பேருந்தில் ஏறி அமர்ந்து மறைந்து போகிறார். ஒரு மறைபொருளில் அத்தனை அரசியல்களும் குமிழிகளாக உடைபடுகின்றன. பாமர ஞானம் அப்படி கனக்கிறது.
இவ்வருடத்தின் முதல் அற்புதத்தைப் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். விளக்கி சொல்லி அகங்காரம் செருமாமல், விளங்கிக் கொள்ள இடம் வைக்கிறார்கள். நம்முடைய ஈடுபாட்டினால் அடைய வேண்டிய வைரம். Lijo Jose Pellissery இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
Reena Shalini: “Sorry guys....no plans to change, no plans to impress...” ❤️. 'சுருளி' படம் வெளியானபோது LJP சொன்ன இந்த வார்த்தைகளை 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் பார்த்த ரசிகர்களும் சொல்லிச் செல்கிறார்கள். "சரிப்பட்டு வருமா?" என டிரெய்லரில் கேட்ட கேள்வி இந்த ஒரு வருடமாக உனக்குள்ளும் உண்டு என்பதை அறிவேன் ஜெய். IFFK-இல் Rajata Chakoram வென்று இருந்தாலும் பொதுமக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்தாகிவிட்டது. மூன்று நாட்களாக அரங்கு நிறைந்த காட்சிகள். அரங்குகளைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். LJP இந்தப் படத்துக்காக நம்மைக் காண சுசீந்திரம் வந்த நாள் முதல் இந்த வெற்றிவரை அவருடைய படங்கள் போலவே மேஜிக்தான். ஜேம்ஸை மறந்து மக்கள் சுந்தரத்தைக் கொண்டாடுகிறார்கள். வாழ்த்துகள் ஜெய்.
Leena Manimekalai: மலையாளம் / தமிழ் சினிமாவில் நடந்தேறியிருக்கும் அற்புதம் லிஜோ ஜோஸின் நண்பகல் நேரத்து மயக்கம். காப்ரியலா கார்சியா மார்க்வஸின் கதாபாத்திரங்கள் உயிர்ப்பிம்பங்களாக திரையில் தோன்றி தமிழும் மலையாளமும் பேசுகின்றனவோ என திகைத்துப்போனேன். ஒளியும் ஒலியும் நிஜமும் மாயமுமாக கண்கட்டி விளையாடுவதை தரிசிப்பது அவ்வளவு திளைப்பாக இருந்தது. உங்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது Lijo Jose Pellissery. விடாப்பிடியாக தனித்தன்மையுடன் இயங்குவதற்கான ஊக்கத்தை உங்கள் படைப்புகள் மூலம் தந்தவண்ணம் இருப்பதற்கு நன்றியும் பிரியங்களும்...
M~R: நேத்து நண்பகல் நேரத்து மயக்கம் பாத்தாச்சு.. லிஜோவிடமிருந்து ஒரு சுமாரான படம்..Ee Ma Yu-ல மரணம் பத்தி பேசி இருந்தாலும் அதுல இருந்த greatness இதுல இல்லை. லிஜோ ரசிகரா எனக்கே கன்வின்சிங்கா இல்லை.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago