அல்போன்ஸ் புத்திரன் எழுதி இயக்கியிருக்கும் ‘கோல்டு’ படம் டிசம்பர் 29-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரேமம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கோல்டு’. பிரித்விராஜ், நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டது.
ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு அல்போன்ஸ் புத்திரனே படத்தொகுப்பு செய்திருந்தார். அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால், திரைக்கதை ரீதியாக விமர்சனங்களை சந்தித்தது. இந்த விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படம் இம்மாதம் 29-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago