‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ முதல் ‘விட்னஸ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ் - தமிழ்: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ’ திரைப்படம் நாளை (டிசம்பர்9) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’, நட்டி நடராஜின் ‘குருமூர்த்தி’, கலையரசன், ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘எஸ்டேட்’, ஆகிய தமிழ்படங்கள் இந்தவாரம் (டிசம்பர் 9) வெளியாக உள்ளது. மேலும், ரஜினி நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படம் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தற்போது மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. ‘பாபா’ படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

மலையாளம்: தரூண் மூர்த்தி இயக்கத்தில் தேவிவர்மா நடித்துள்ள ‘சௌதி வெள்ளக்கா’ (Saudi Vellakka) மலையாளப்படம் 9-ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாகிறது.

கன்னடம்: ப்ரியாமணி நடித்துள்ள ‘டிஆர்56’ மற்றும் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள ‘விஜயானந்த்’ (Vijayanand) ஆகிய இரண்டு படங்கள் கன்னடத்தில் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன.

தெலுங்கு: நரேஷ் ஆகஸ்த்யா நடித்துள்ள ‘பஞ்சதந்திரம்’ (Panchathantram) மற்றும் தமன்னா நடித்துள்ள ‘குர்துண்ட சீதாகாலம்’ (Gurtunda Seetakalam) படங்கள் வெளியாகின்றன.

இந்தி: கஜோல் நடித்துள்ள ‘சலாம் வெங்கி’ (Salaam Venky) டிசம்பர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹினி நடித்துள்ள ‘விட்னஸ்’ சோனிலிவ் ஓடிடி தளத்திலும், இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கியுள்ள ‘ரத்தசாட்சி’ ஆஹா ஓடிடி தளத்திலும் 9-ம் தேதி வெளியாகிறது. ஷைன் டாம் சாக்கோ, சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ‘ராய்’ மலையாள படம் சோனிலிவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சமந்தா நடிப்பில் உருவான ‘யோசோதா’ அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், சுந்தர்.சியின் ‘காஃபி வித் காதல்’ ஜீ5 ஓடிடி தளத்திலும் 9-ம் தேதி வெளியாகிறது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘டாக்டர் ஜி’ இந்திப்படம் நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இணையதள தொடர்கள்: அஞ்சலி நடித்துள்ள ‘ஃபால்’ (Fall) தமிழ் இணையத்தொடர் ஹாட்ஸ்டாரில் 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்