கார்த்தி நடிப்பில் உருவான ‘சர்தார்’ திரைப்படம் இம்மாதம் 18-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’‘சர்தார்’. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்தி, தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாஃபியா, உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்திருந்தார். ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ’சர்தார்’ படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘சர்தார்’ திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago