“உங்கள் ஆர்வத்திற்கு நன்றி” - ‘இரவின் நிழல்’ ஓடிடி ரிலீஸ் குறித்து பார்த்திபன்

By செய்திப்பிரிவு

'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

இந்தப் படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. படம் திரையரங்குகளில் வெளியாகி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதன் இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும்! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன்… இருக்கிறோம். பார்ப்போம்!
நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்